யாரென்று தெரியாமல்
அவர் தந்த சூல் கொண்டு
ஈன்றெடுத்துக்
கூடிவரும் போதெல்லாம்
பிரசவித்துப் பார்த்திடினும்
கன்னிதான் கவிஞன்
கண்காணா காரணத்தில்
கருத்தின் நிறையழிந்து
சொற்கரும்பு பிலிர்க்கும்
ஒளிரசம் உள்வாங்கிக்
கற்பனைக் குடல்விளங்கக்
கஜப்பிரசவமோ கணப்பிரசவமோ
தோன்று கவிதை
எடுத்துரைக்கும் போதெல்லாம்
ஈன்று புறந்தந்த
ஈடில்லா ஆயாசம்
கூடிவரும் தன்மை
கொண்டவனே கவிஞன்
***
No comments:
Post a Comment