நெடுஞ்சாலை
பரிசல்
மனித கவனத்தின் முப்புரியாய்
மூண்ட பெருவழியில்
தொலைவில்
சிவனிரவில்
நள்ளிரவுப் பையிருளில்
நாகமணி விண்மீன்
உமிழ் ஒற்றைக் கதிரில்
மாந்தோப்புக்குள்ளே
ஒரு மண் தரையில்
விறகடுக்கி வெந்தழலின் விதிர்நாவில்
சித்தின் சிலாம்பூட்டிச்
சிவணும் கதகதப்பில்
சிவிறும் சொல்மடக்கி
இருட்திரையில் ஒளி நா
ஒத்தி எழுதுகின்ற
உருவம் கரையாமுன் உள்வாங்கி
மன இடுக்கில்
சொருகி வைத்த உருப்படிவம்
சுயமாகச் சுடர்காலச்
சருகேறி ஊர்ந்துவரும்
சிறுகால் சாந்தத்தின்
புருவக் குறுவெயர்ப்பைப் படிந்தாற்றி
வைகறையின் வரும்வழியை
முறைவாசல் செய்ய
முந்துற்றுப் போயினதால் மீண்டு
***
No comments:
Post a Comment