Sunday, November 7, 2021

எழுதுக

எழுது எழுது 
என்றீரே எழுதிய 
ஒரு முன் சென்றோன் 
ஏங்கி ஏங்கி 
ஏக்கத்தில் விரக்தியில் 
எழுதியதைக் கல்லடுக்கிச் 
சூட்டில் சமைந்த 
சொல்லூதிச் 
சித்தின் சிதையை 
எரித்த கதை கேட்டீரே.. 
எழுதிடவா சொல்லும்.. 
எழுது எழுது 
எழுத்தில் புப்புதுவாய்ப் 
பிறந்து உயிர்க்கலாகும் 
உயிரின் பிறப்பில் 
உணர்வின் பிறப்பாய்ப் 
பிறந்தவாறே இருத்தல் 
நிலைப்பேறாகும் 
அதனால் எழுது. 

***

No comments:

Post a Comment