Friday, November 5, 2021

கபாலம்

வாழ்வு ஒரு கபாலம் 
ஆடிக் கொண்டிருக்கும் 
நிமிர்த்துக் 
கவிழ்த்து 
ஆடாமல் வைக்க முடியாது 
தத்தித் தடவி 
வழுக்கிச் சறுக்கி 
மெல்ல... ஏறி 
விளிம்பை அடைந்தால் 
அப்பால் 
எல்லாம் முடிந்துவிடும் 
பின்பு 
பக்கத்து அறையில் 
பிரசவ வேதனை. 

***

No comments:

Post a Comment