Wednesday, November 10, 2021

உயிருக்கு நான்

வீடு உன்னுடையது 
நீ வீட்டில் இருக்கிறாய் 
ஆனால் வீடு உன்னுடன் பேசாது 
உன்னைப் பற்றி அதற்குத் தெரியாது 
வீடு என்னிடம் பேசும் 
நான் கொத்தனார் 

விளக்கு எரிகிறது 
நீ வேலை பார்க்கிறாய் 
நீ வாங்கிப் போட்ட விளக்கு 
ஏற்றுவாய் அணைப்பாய் 
ஆனால் விளக்கு உன்னுடன் பேசாது 
உன்னைப் பற்றி அதற்கு ஒன்றும் தெரியாது 
விளக்கு என்னிடம் பேசும் 
நான் எலக்ட்ரீஷியன் 

உயிர் இருக்கிறது 
நீ வாழ்கிறாய் 
நீ பிறந்து வளர்ந்த வாழ்வு 
மூச்சினை இழுத்து மூச்சினை விட்டு 
முழுநேரம் இயங்கும் உயிர் உன்னுள்ளே 
ஆனால் உயிர் உன்னுடன் பேசாது 
நீ இருக்கிறாய் என்றே அதற்குத் தெரியாது 
உயிர் என்னிடம் பேசும் 
நான் .... 

***

No comments:

Post a Comment