முதுகுத் தண்டின் பலத்தில்
மார்புக் கூட்டின் விரிவால்
மூச்சின் உள்பொங்கிய பொலிவில்
நான் என்ற திமிர்
தன்னை நயந்த தழல் நிமிர்வால்
நின்று பார்க்கும் இயல்பால்
நேர்த்தியின் நியாயமான நெகிழ்வால்
நிமிர்ந்து நில்
தலை நிமிர்த்து
அடி விழலாம்
விழுமுன் உணர்
விழும் அடி வறட்டு அடியாய்
வீழாது வீழும்
பனிமலர் படிவது போல்
விரைதாது வண்டின் கால்
படிவது போல் தாழும் அடி
தலைமீது தொட்டதும் கூடத்
தெரியாமல் போகும்
எனவே
விழிப்பின் விரல் வைத்து உணர்
அடிவிழுமோ எனத் தலை சாய்க்காதே
தலை நிமிர்ந்ததனால்
அடி விழுந்ததிலை
தலை நிமிர்வும்
அடி வீழ்வும்
தம் தம் போக்கில்
தொடர்பின்றி மயங்காதே.
***
No comments:
Post a Comment