Wednesday, November 10, 2021

உலக மாற்றம்

ஓடிச் சலித்த கால்
கையைக் கனவு காண்கிறது
எழுதிச் சலித்த விரல்
கண்ணைக் கனவு காண்கிறது
கனவில் சலித்த மனம்
நினைவில் விழிக்கிறது
கொஞ்சம் இருங்கள்
உலகம் ஏதாவது மாறிவிட்டதா
என்று பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். 

***

No comments:

Post a Comment