Wednesday, November 3, 2021

ஊர்க்கிளி

கிளிக்குஞ்சு 
நந்தவனத்தில் கீழ்க்கிடந்து துடித்ததென்று 
கர்ச்சிப்பில் தூளிகட்டிக் கொண்டுவந்து 
ஊர்க்கண்ணில் படாது 
வீட்டில் எவரும் அறியாது 
வாசல் படிக்கட்டு 
மாடிப்புழை அருகே 
சொகுசாக வைத்தேன் 
பாற்சோறும் பழமும் 
பசியறிந்து பரிமாறிப் 
பக்குவமாய்க் கவனித்தேன் 
பேசவைக்கப் பாடம் 
பெருவார்த்தை ரங்க என 
ஒரு தடவை சொல்லாதோ 
ஓயாமல் கீயென்று 
ஒண்சிவப்பு அலகால் 
ஊரெல்லாம் பறந்துவர 
உச்சியைப் பார்த்தது 
உட்கூரை சுத்தும் என்று 
ஒரு நிமிஷம் எடுத்து விட்டேன் 
ஊர்க்கிளியாய் ஆனது 
இன்றென்னைக் கேட்டால் 
எந்தக் கிளி என்று தெரியாது 

***

No comments:

Post a Comment