மிச்சங்களில் குனிந்து
எதையோ தேடுகிறேன்
வீட்டின் மொட்டை மாடி
மல்லாந்து படுத்துக்
கையைத் தலையணையாக்கி
மேலே உயரத்தில்
நீல வானத்தின்
தூய நேர்த்தியில்
வடிவங்களை நான்தான் வனைகிறேன்
ஆமாம்... நான் ஏன்
என் வீட்டு வாசல் படியில்
படிக்கட்டை ஒட்டிய
தெருவில் நின்று
பார்ப்பதே இல்லை!
***
No comments:
Post a Comment