கடவுள் என்ற ஒன்றின் பின் ஒளிந்து..
திரமாக நின்று பார்க்கத்
திராணியில்லை என்று நினைத்து
எதற்கும் இருக்கட்டும் என்று
முனகலும் முறைகளும்
மனத்தில் முறைக்கும் முகங்களுக்குப் பிரீதி
ஆயிரம் சொன்னாலும்...
இறப்பு.
எல்லாப் பதில்களும்
ஒரு திடீர் முற்றுப்
புள்ளியில் தடுக்கி
விழுந்ததா மறைந்ததா
எழுந்ததா என்று கூடத் தெரியாது
அந்த முற்றுப்புள்ளி
விடும் புகைமூட்டமாய்க்
கேள்விகள் எழுந்து கண்ணைக்
கரிக்கும் புதிராய் வெற்று வெளி.
***
No comments:
Post a Comment