Tuesday, November 23, 2021

சுழல்

ஊர் சமயத்தில் கலங்கிக் கிடக்கும் 
ஆற்றைப் போல 
அரசமரம் இருந்த இடம் 
பேர்ந்த பின்பு 
ஆற்றில் அங்கே சுழல் புகுந்தது 
ஆளிழுத்துச் சொருகி வைத்து 
ஆறுபேர் பலி இதுவரையில் 
ஊரிலும் சுழல்கள் உண்டு 
பெரிய குடும்பங்கள் வாழ்வற்றுப் 
பெயர்ந்து விட்டால் 
அங்குச் சுழலும் சதியும் பழியும் 
பார்த்து நகாசாகப் போக வேண்டும் 
பார்க்காமல் போனால் பண்பின் கேடு 
பார்த்து நின்றிட்டால் பழியின் கேடு 
பக்கத்தில் போனால் சதியின் நாற்றம் 
பழகப் போனால் பாதகத் தோற்றம் 
வெள்ளங்கள் வடிந்த வேதனை 
வேர்களைப் புரட்டும் 
புதுவெள்ளம் வந்து கரைகளை உடைக்கும் 
மழைபெயல் பலவழி நீர்களைக் கலக்கும் 
ஓடுகின்ற நீர் மூர்க்கம் கொள்ளும் 
ஓரத்து மரங்களை அரித்துத் தள்ளும் 
பெருங்குடும்பம் ஒன்று சரிந்த பள்ளம் 
பார்த்து வாருங்கள் 
மணல் காலைக் கீழ் அரிக்கும். 

***

No comments:

Post a Comment