நீண்டு விரிந்த கொண்டாட்ட
நிகழ்கால விளிம்பில்
நாளை என்பதைச்
சுருட்டித் திணித்துச்
சொருகி அடைத்த சாவகாசம்
நேற்று என்னும்
நிகழ்கால மேடையின் அடி மூங்கில்
பலநாள் வேர்த்த
ஒரு நாள் சுகந்தம்
இனிவரும் காலம்
கடைவாய் மெல்லும்
பன்னீர்ப் புகையிலை.
***
No comments:
Post a Comment