Tuesday, November 23, 2021

வாடிக்கை

வாடிக்கையான வானத்தின் கீழே 
வாசலில் கட்டில் போட்டமர்ந்தேன் 
வளைய வந்த பூங்காற்று நாணிக்கொண்டு 
வாரிச் சுருட்டி ஓடியது 
சரி வரட்டும் என்று 
விசிறியால் வீசினேன் 
சந்தர்ப்பம் தெரியாமல் 
சிரித்து வைத்தது அணிற்பிள்ளை 
கூடச் சேர்ந்து பேருக்குச் சிரித்துவிட்டுக் 
கூரை வானில் ஓட்டைகள் 
எண்ணிப் படுத்திருந்தேன் 
குவலயத்தில் மக்கள் பேசும் கதைகளெல்லாம் 
ஆவியாகி மேலே சென்று திரிவதுபோல் 
அதற்கப்பால் புராணமாகி வருவதுபோல் 
மேகம் கருத்து வந்து தூறல் போட்டது 
வாரிச் சுருட்டி உள்ளே 
கட்டிலைப் போட்டேன் 
வானம் தெளிவடையப் பழையபடி 
வளைய வந்ததந்தப் பூங்காற்று 

***

No comments:

Post a Comment