Wednesday, November 24, 2021

மனநிறம்

உள்ளதாம் தன்மையை 
உணர்ந்து ஓர்ந்து ஊருக்குச் சொல்லி 
வாழ்க்கையில் கண்ட கவியின் 
பெருமை சாற்றித் 
தன் நெஞ்சறிந்ததை 
வஞ்சனையின்றிச் சொல்லிய பின் 
இனி அதை ஏந்தி 
ஏற்ற இடத்தில் வகுக்குமோ 
வகுக்காதோ உலகின் இயல்பு 
முன்னே போல் இல்லை 
இப்பொழுது நிரம்பவும் அதிகம் 
பின்னே ஒரு வேளை  வரலாம் 
இப்பொழுதைக்கு இல்லை 
பிறகு பார்த்துக்கொள்வோம் 
இப்பொழுதைக்குப் போதும் 
முன்னே பின்னே இப்பொழுது 
இவ்வளவுதான் இருக்கின்றன 
இதற்குள்ளேதான் வதக்க வேண்டும் 
வார்த்தைகளை ஊற்றி 
வாழ்வின் அனுபவச் சட்டியில் 
மனநிறம் வரும் வரையில் 

***

No comments:

Post a Comment