Friday, November 26, 2021

அருள் பிணக்கு

அழுதால் உன்னைப் பெறலாமாம். 
நன்றாக அழுதால்
அசதியில் தூக்கம் வந்துவிடுகிறது.
தூக்கத்தில் கனவிலாவது
நீ வரக் கூடாதா?
மூடிய இமைக்குள் இவ்வளவு
குப்பைத் தொட்டியா என்று
குமட்டிக் கொண்டு விழித்தால்
என் அழுகையும் பொய்
நானும் பொய்
நீ மட்டுமே மெய் என்றால்
இருந்துவிட்டுப் போகட்டுமே
யாருக்கென்ன?
மொழிந்து மொழிந்து
காலமெல்லாம் மொழியலம்பி
வந்து விழுந்த எச்சமாய்
வாழ்க்கை
அருளுக்கும் ஆயிரம் இருக்கும் என்றால்
மருளே போதும்
திட்டினாலும் விரட்டினாலும்
காறித் துப்பினாலும்
கருணையொடு வந்து
உள்ளே ஒட்டுகிறது
நீ யாரு வந்தவழி என்ன என்று
கர்மக் கணக்கை
என்னிடமே கேட்பதில்லை. 

***

No comments:

Post a Comment