நனவில்லை முழிப்பில்லை
கனவும் நனவும் சேரும் கோட்டில்
துயில் சாரும் பொருள் முயக்கில்
ஓடுகின்ற ஃபேனோசை
ஓடிவரும் ரயிலோசை
உள் ஒன்று நான் என்று
ஓயாமல் பிரட்டோசை
உணர்ச்சிகள் உள்மறுகி
உரசலில் உள்ளோசை
ஒரு கோட்டில் வந்தமர்ந்து
ஊரெல்லாம் தானளக்கும்
விரிபுலன்கள் வாய்பிளந்து
ஓய்ந்தபின் மோனத்து உள் ஓசை.
***
No comments:
Post a Comment