Friday, November 5, 2021

அந்தர்யாமி

அந்தர்யாமி 
அழகிய வீடு கைபுகுரப் 
பூட்டிய வாயில் திறந்து உள் நுழையப் 
பத்திரப்பதிவுப் பத்ததி இன்னும் முடியாமல் 
கொல்லைப்படலை ஒதுக்கிப் புகுந்து 
தூசியில் சயனம் கொண்டவன் கனவில் 
முற்ற மர நீழல் பந்தர்க் கட்டில் 
மடித்துப் போடும் இனிமைப் புறந்தடவி 
மொழிச்சுண்ணம் சிவந்த 
நினைவின் உள்நா 
நீளும் இதழ் வெளி நிர்மல வானம். 

***

No comments:

Post a Comment