Friday, November 5, 2021

கமுக்கம்

பிடித்ததைப் படிந்ததோடு 
பிணைத்துப் பசப்பிய சூச்சம் 
சையோகித்த சாத்தியம் 
கையகத்ததான கமுக்கம் 
அடைத்துப் பிதுங்கிய உதட்டின் சுருக்கம் 
துடித்துத் தளரத் தொங்கச் செய்யும் 
கட்டவிழ் கணமும் நெகிழ்ந்து 
பிரிந்து நழுவக் 
கேள்விக் குறியாய்க் கலவரமாகும். 

***

No comments:

Post a Comment