Sunday, November 14, 2021

வாழ்வின் தன்மை

வாழ்வுக்கு வேண்டியதை 
அவ்வப்பொழுதுதான் 
தேடிக் கொள்ள நேர்கிறது 
மொத்தமாகத் தேடி வைத்து 
கிடங்கு போல் அதிலிருந்து 
எடுத்தெடுத்துப் பயன்படுத்த 
முடிவதில்லை. என் செய்ய? 
அதற்காகக் கணத்திற்குக் கணம் 
தத்திச் செல்லும் 
குருட்டுப் பாதையும் அன்று வாழ்வு. 

***

No comments:

Post a Comment