எல்லையில்லா ஆனந்தம்
கொட்டிக் கிடக்குதென்று
சொல் இறந்த மொழியில்
சொன்னதை ஏற்கும் நெஞ்சம்
மனிதராய்ப் பிறந்த நீங்கள்
மகிழ்ச்சியை
மனத்தால் வாக்கால் செயலால்
செயித்துச் சாதித்தல்
வாழ்வின் இயல்பு என்று
உணர்ந்தவன் உரைத்ததைக்
கேட்டும் செவிடாய்ப்
பதிலற்ற ஊமையாய்ப்
புதிர்போல் புரியாது
விழிப்பதும் ஏனோ?
***
No comments:
Post a Comment