கவலையை மறக்கத்தான்
ஆனால் காரே வலையாய்க்
காலைப் பின்னும் என்று யார் கண்டார்கள்?
பராங்குச நாயகியாய்ப்
பரகால நாயகியாய்ப்
பாசுரங்களில் வடியும் காதல்
பருவக் காதலை இனம் காணவில்லை
பார்க்கவும் பேசவும் பழகிச் சிரிக்கவும்
பெண்ணாய்ப் பிறந்தது
பிறழ்ந்துதான் ஆகவேண்டும்
என்ற ஊர்வம்பின் தீர்மானம்
நட்பைச் சோரமாக்கி
வாடிக்கைக்கு வரிசை நிறுத்தியது
கன்னி என் கனவுகள்தாம்
கற்பித்தன எனக்கு வாழ்க்கையின் நிஜத்தை
திருகிக் கோணலாகித் திணறும்
இந்தச் சமுதாயத்தை
வெறுக்க முடியவில்லை என்னால்
இருண்ட முற்றத்தில் ஏற்றிவைக்க
ஓர் அகல் விளக்கைத் தேடும் கண்கள்.
***
No comments:
Post a Comment