சந்தர்ப்பம் தேடிவிடும் நோட்டத்தின் மேல்சாயம்
ஒன்றுக்கொன்று இணைத்து வைத்து
ஆட்டுகின்ற கம்பியிழை
காணாமல் எவரும் புதைத்து வைத்துக்
கருத்திலாதது போல் காட்டிச்
சூழ்நிலையின் மடுக்கரையில்
படுத்திருக்கும் பாசாங்கு
கேட்காமல் கேட்டுப் பெறாமல் பெற்று
நோகாமல் எடுத்துவிடும் நுட்பம்
விளக்கம் மறைத்துவரும்
வாய்ச் சொற்புதரில் வாலாட்டி
வேறு ஒரு பொந்தில் தலைவைத்துக்
காத்திருக்கும் கண்ணற்ற பார்வையில்
விழிப்பாவை சுருக்கங்கள்
வான் மேயும் மேக நிழலாய்.
***
No comments:
Post a Comment