சிந்திக் கிடக்கின்றன
பொறுக்குவாரின்றி நேரமின்றிப்
புவனத்தின் புள்ளியில்
போகின்றது வருவது எல்லாம்
பதித்துவிட்டுப் போகும்
காலத்தின் முதுகரங்கள்
கைதொட்ட கருங்கற்கள்
கதைசொல்லிப் பரந்து நிற்கும்
வாழ்கின்ற தலைமுறைக்குள்
வாழ்ந்த தலைமுறைகள்
வழிவழியாய் நினைவில் படிவமாகி
வீதிவழி போகின்ற உருவமாகும்
வற்றாத நினைவுகள்
வளங்கொழிக்கும் வயலரங்கம்
தூக்கத்தில் தொடர்கதையாய்த்
திகழும் உயிரரங்கம்.
***
No comments:
Post a Comment