Tuesday, November 23, 2021

தவளைக்கல்

பிறந்துயிர் விழித்த பெரும்பிழையாகப் 
போக்கற்ற உலகம் புரண்டது 
பொங்கும் நீரில் பிணம் ஒன்றலைந்து 
பச்சை மரத்தில் சிக்கியது 
கரியைப் பூசிக் கழுவிய வானில் 
கருப்பு மின்னல் வெட்டியது 
கரையை மீறிய நீரில் ஊரே 
கவலைக் கடலில் மிதந்தது 
சரியா தவறா யார் கூறுவது? 
சற்றே பொறுங்கள் 
ஒரு மரம் சாய்கிறது 
சற்றே சரிந்த மின்கம்பத்தில் 
மாட்டிய பட்டம் வாலாட்டப் 
போட்டிக்கு ஆட்டும் வால்குருவி 
கேட்கக் கேட்கக் கிடைத்த பதிலாய்த் 
தண்ணீரில் விட்ட தவளைக்கல் 
தட்டியில் மோதி விழுந்தது. 

***

No comments:

Post a Comment