Thursday, November 18, 2021

தன்னோடு தான் விளையாட

ஏற்கனவே நீ தப்பு பண்ணிட்டே 
என்றது ஒரு குரல் 
என்ன தப்பு செய்தேன்? 
நினைவில்லை 
ஏன் இந்தக் குரல்? 
யாருடைய குரல்? 
புரியவில்லை 
ஏதோ நானே கேட்டு 
நானே பதில் உரைத்துக் கொள்வதாகச் 
சொல்லித்தான் ஆக வேண்டும் 
செல்லும் வழியில் ஒரு சிகப்பு நாய் 
மெல்லிய உடல் 
வாலை ஆட்டி வலமும் இடமும் 
மாறி மாறி வளைய வருகிறது 
இது எங்காவது பிடுங்கி விடுமோ 
பயம் பதைபதைக்கக் 
கையில் கிடைத்ததை எடுக்க நினைத்தால் 
இந்தக் குரல் வேறு 
தப்புப் பண்ணிவிட்டதாக 
யாருடையது இந்தக் குரல்? 
என்னுடையதாக இருந்தால் 
ஏன் என்னை முன்னிலைப் படுத்துகிறது? 
தனக்குத் தானே சீட்டு போட்டுக்கொண்டு 
தன்னுடனேயே விளையாடுவது 
உள்ளத்தில் உயிரின் பிராந்தியத்திலும் 
இருக்கும் போலும்! 

***

No comments:

Post a Comment