Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Friday, February 26, 2016
நிழல் மௌனம்
ஒலியால் ஒரு நூலிழைத்து
உள்ளும் புறமும் நெய்து
உடுத்திய வடிவின்
உள்ளங்காலில் தேய்க்கும் ஒலி;
நடுவில் மற்றபல ஓசைகள்.
கொண்டைக் குமிழில்
குயிலின் கூவல்.
வடிவத்தின் குலை சிதைய
வரும் விமான ஓசை
நிர்வாணம் மறைக்க
ஒளியின் பின்னால்
ஒளிந்த வடிவின்
நிழலாய் நின்றது மௌனம்.
***
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment