Friday, February 26, 2016

மொழி ஒன்று வேண்டும்

மொழி ஒன்று வேண்டும்
வாயைத் திறவாது
மனத்தோடு மனம் பேச
மொழி ஒன்று வேண்டும் 

விழியாலே விழி பேசும் முறையில்
விழைவோடு மனம் பேசலாமோ?
குழைவோடு உளம் நேசம் ஆமோ? 

மின்சாரக் கம்பியில் காக்கை
தன்சார்பு சிறகொன் றொடிந்து
துன்போடு துயரத்தில் திகைத்து
என்னோடு ஏதேதோ சொல்ல 

கண்ணோடு கண் பேசும் வித்தை
கல்லாத குறையும் தான் எனதோ? 

அன்போடு மெதுவாக நானும்
அளவோடு அமைதியாய்முன் னேறக் 
கைச்சாடை காட்டி நான் சென்றால்
கட்டத்தான் வருகிறான் என்றது எண்ணி
விட்டுவிட்டுப் பின் விலகித் தான் போகும்
வலி தாங்காமல் துன்பத்தில்
கரையத்தான் செய்யும். 

மொழி ஒன்று வேண்டும் -- உடனே
மொழி ஒன்று வேண்டும் -- உளம் கலந்து
மனத்தோடு மனம் பேச -- உண்மை
மொழி ஒன்று வேண்டும். 

***

No comments:

Post a Comment