பூக்கும் போதுல தும்பி சிணுங்குது
ஆந்தை கத்துது கோட்டான் அலறுது
ஆழக்காட்டுல பறவையெல்லாம்
கூழுக்காக கத்துதுப்பா
கூட்டுச் சுகத்துக்குக் கத்துதுப்பா
வேலையற்ற மனிதர்
வீணடிக்கும் பொழுதில்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
கதைவிடுகிறார் நம்மிடம்
கவிதை பாடுதாமாம் எல்லாம்.
போதாக் குறைக்கு
சுருதிப் பெட்டி போட்டு
சங்கீதம் வேற படிக்குதாமாம்.
ஓய் ஓய் ஓய்...இருவே....
விட்டா வாய்க் காலில்
அட்ட திசைக் கொட்டகை போட்டு
முட்ட முட்ட ஆகாயக் காபி ஆத்துவீரே...
எங்க இருக்கு கவிதை
எங்க இருக்கு சங்கீதம்
விட்டா நாத லயத்துல
ஆதி மூலத்துல
நீஞ்சறாராமாம்.
அது அது கும்பி எரிச்சலிலும்
காமக் குடைச்சலிலும்
நொந்து வெந்து
ஆதி உயிர்வேதிம
அடையாளக் கூப்பாட்டை
வாழ்வா சாவா என்று
உரத்த வேக்காட்டில்
அன்றைக்குப் பிழைக்கக் கூவுது ..
வந்துட்டாரு இவரு
கால் மேல கால் போட்டு
சபாஷ் பலே என்ன ராகம் என்ன கீதம்....
போங்காணும் போய்ப் பொழைப்பைப் பாரும்...
இல்லன்னா காட்டுல அலையுறதெல்லாம்
அது அது திருப்பிக்க போறது...
*
வந்துட்டாரு இவரு
கால் மேல கால் போட்டு
சபாஷ் பலே என்ன ராகம் என்ன கீதம்....
போங்காணும் போய்ப் பொழைப்பைப் பாரும்...
இல்லன்னா காட்டுல அலையுறதெல்லாம்
அது அது திருப்பிக்க போறது...
*
No comments:
Post a Comment