நூலகத்தைத் தேடி ஓடும்
நதியாக இருப்பது மாறி
அறிவிலும், அனுபவத்திலும்
ஆத்மார்த்தமான உணர்விலும் பிறந்து
உண்மையான ரசிக உள்ளத்தை
நாடிப்போய் நூல் அடைந்தால்
அன்றே கிருத யுகம்.
வணக்கம் சார்
எப்படி இருக்கீங்க?
என்னமோ இருக்கேன்.
ஆமா நீங்க எப்படி?
எப்பவும் நூல்களில்
தலைவிட்டுக் கொண்டு இருப்பீங்க.
உங்களுக்கு என்ன சார்?
அதை ஏன் சார் கேக்கறீங்க?
நூல் நயத்தல் ஒரு தொல்லை.
இப்பொழுதுதான்
ஆயிரக் கணக்கான நூல்களை
ஒருவழியா வெளியேற்றினேன்.
மறுபடியும் பல நூல்கள் வந்து
யதாஸ்தானத்தில் அமர்ந்துவிட்டன.
நூல்கள் மிகவும் யதேச்சையாக இருக்கின்றன.
ஏன் என்று ஒரு வார்த்தை கேட்பது கிடையாது.
என்ன சொன்னாலும் காதில் விழாது
கதவைத் தட்டித் தள்ளிவிட்டு
உள்ளே வந்து உட்காரும் ..!
என்ன செய்வது.
ஒரு காலத்தில்
புத்தக வலையில் போய்
நான் விழுந்தது உண்மைதான்.
இல்லை என்று மறுக்கவில்லை.
ஆனா இப்பொழுதோ ..
'சொல்லச் சொல்லப் போய் விழுந்தாய்
இப்பொழுது படு'
என்பதுபோல் வக்கிரப்பார்வை.
அம்மாவிலிருந்து
அருமை நண்பர்கள் வரை.
இது குறைச்சல்.
இன்னும் எனக்குத் தெரிந்தவர்களுக்கு
வீட்டைவிட்டுத் துரத்தியிருக்கிறார்கள்.
விவாகரத்து ஆகியிருக்கு.
மகன் மகள் பேச்சு இல்லை.
மனைவி நாசுக்கா
தள்ளி வைத்துவிட்டாள்.
மருமகள் ஓசைப்படாமல்
முதல் நாள் ஆஸ்பத்திரிக்குப்
போய்வருவதற்குள்
அலமாரி அலமாரியாகப் புத்தகங்களை
லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டாள்.
தலையெழுத்து என்று தூக்கம் வராமல்
புரண்டதுதான் மிச்சம்.
இத்தனைக்கும்
நல்ல மருமகள்தான்
நல்ல பையன்தான்
எல்லாம் 'நூல்' என்னும்
பேதைமையால் விளைந்த பயன்.
கணவன் எப்படி இருந்தாலும்
நல்ல பேர் எடுத்துவிடலாம்.
ஆனால் என்னதான்
திறமையாய் இருந்தாலும்
'நூல்' பழக்கம் இருந்தால் ..
இல்லை சார்
இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.
நூல் படுத்துகிற பாடு தாங்கவில்லை.
கொஞ்சம் இருங்கோ ..
ஒரு செல் அழைப்பு..
...ஹங்...ஹங்...
நான்தான்..
சொல்லுங்கோ...பரவாயில்லை..
அப்படியா?....இல்லை இல்லை ...
பிரச்சனையே இல்லை....
நீங்க ஒன்றும் சிரமப் படவேண்டாம்..
எத்தனை பீரோ
நூல்கள் இருந்தாலும்...
அதான்...புரியறது...
ஆமாம்...யாரையாவது நம்பி கொடுத்தால்
பாழாகப் போய்விடும்....
உண்மைதான்...இல்லை,,
அதுக்குத்தான் சொல்கிறேன்...
நான் வந்து பார்க்கிறேன்.....
பார்த்துவிட்டு.....
இப்பவேவா?....
ஓஹோ...சரி சரி....இதோ வருகிறேன்...
ஆனால் என்னதான்
திறமையாய் இருந்தாலும்
'நூல்' பழக்கம் இருந்தால் ..
இல்லை சார்
இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.
நூல் படுத்துகிற பாடு தாங்கவில்லை.
கொஞ்சம் இருங்கோ ..
ஒரு செல் அழைப்பு..
...ஹங்...ஹங்...
நான்தான்..
சொல்லுங்கோ...பரவாயில்லை..
அப்படியா?....இல்லை இல்லை ...
பிரச்சனையே இல்லை....
நீங்க ஒன்றும் சிரமப் படவேண்டாம்..
எத்தனை பீரோ
நூல்கள் இருந்தாலும்...
அதான்...புரியறது...
ஆமாம்...யாரையாவது நம்பி கொடுத்தால்
பாழாகப் போய்விடும்....
உண்மைதான்...இல்லை,,
அதுக்குத்தான் சொல்கிறேன்...
நான் வந்து பார்க்கிறேன்.....
பார்த்துவிட்டு.....
இப்பவேவா?....
ஓஹோ...சரி சரி....இதோ வருகிறேன்...
சார்! ஓர் அவசர வேலை.
அப்புறம் பார்ப்போம்.
ஆனால் இதைப்பற்றி
நாம பேசறோம்.
ஒரு முடிவு எடுத்தாகணும்...என்ன?
***
No comments:
Post a Comment