பலர் துரத்தக்
கயவர்க்கும், காமுகர்க்கும்,
கிராதகர்க்கும் அஞ்சி
என்னுள் ஒளிந்துகொண்டாய்!
அந்தோ அபலை என்று
என் அகத்தை
உன் அந்தப்புரம் ஆக்கினேன்.
ஆடலும் பாடலும்
அந்தரத் திரிதரலும்
சுந்தர நொடிப்பும்
சுழல் எழில் களிப்பும்....
என்னையும் புறத்தே நிறுத்தி
ஆண்டாய்
‘சொல்’ என்னும் தவிசில் ஏற்றி!
***
No comments:
Post a Comment