காதல் அவளிடம் கொண்டேன்.
கனையிருள் இனித்திடக் கண்டேன்.
பேதம் அகன்றிட நின்றேன்
பிறவி இனித்திடும் தேன்.
நீதம் இதுவெனக் கொண்டேன்
நாதம் உருவெனக் கண்டேன்
போதம் பிறந்திட நின்றேன்
பொய்மை இனித்திடும் தேன்.
வேதம் புதிதெனக் கொண்டேன்
பாதப் பதுமலர் கண்டேன்
மோதும் கடைவிழி நின்றேன்
முடிவும் இனித்திடும் தேன்
ஏத மிலையெனக் கொண்டேன்
ஏந்திழை ஏற்றமும் கண்டேன்
தீதும் அகல்வழி நின்றேன்
தீயும் இனித்திடும் தேன்.
மைதிலி தேடிய மாலும்
மாலினைத் தேடிய மாதும்
எய்தினர் என்பதும் மெய்யோ
ஐயம் இனித்திடும் தேன்
மலைமகள் நாடிய பிச்சும்
தலைமகள் கூடிய உச்சம்
கலைமகள் எழுதிய மிச்சம்
காதல் இனித்திடும் தேன்.
ம் .. ம் .. காதல் படுத்திடும் தேன்!
***
No comments:
Post a Comment