Saturday, February 27, 2016

கருங்கல்

கருங்கல் சுவர்
அதன் முதுகில், பக்கங்களில், அடியில்,
சார்புகளில் எங்கும் வெட்ட வெளி
அமர்ந்து, அணைத்து, தழுவி நின்றாலும்,
ஏன், சுவரின் நடுநடுவே இடுக்குகளில்
வானமே ஒளிந்துகொண்டாலும்
வெளியின் மர்மம் ஏதோ
தான் அறிந்தது போலும்
அவ்வப்பொழுது
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்,
கற்களின் இணைப்பின் விரிசலில்
ஒரு சிறிய பூ
வேர் சூடிய முடியாய்
அசையக்
காற்றிடம் சொல்லிக்
கடுகடுக்கும் வானம். 

*** 

No comments:

Post a Comment