கனிந்தால்
கோலமும் குணமும் நிறையட்டுமே
நிறைந்தால்
ஓலமிடும் உள்ளம் ஒடுங்கட்டுமே
ஒடுங்கினால்
பால் வெண்ணீற்றின் கண் திறக்கட்டுமே
திறந்தால்
நூலுலகின் நுட்பம் புரியட்டுமே
புரிந்தால்
ஆலமர் மறைபொருள் விளங்கட்டுமே
விளங்கினால்
நிறைந்தால்
ஓலமிடும் உள்ளம் ஒடுங்கட்டுமே
ஒடுங்கினால்
பால் வெண்ணீற்றின் கண் திறக்கட்டுமே
திறந்தால்
நூலுலகின் நுட்பம் புரியட்டுமே
புரிந்தால்
ஆலமர் மறைபொருள் விளங்கட்டுமே
விளங்கினால்
தூலத்துள் நிற்பது தெரியட்டுமே
தெரிந்தால்
சூல்கொண்ட சூட்சுமம் சுடரட்டுமே
சுடர்ந்தால்
நால்வகை வாய்மொழி நவிலட்டுமே
நவின்றால்
பால்துயில் பரமனைப் பரவட்டுமே
பரவினால்
காலமும் கனவும் கனியட்டுமே
கனிந்து
மால்கொண்ட நெஞ்சம் மிதக்கட்டுமே
மிதந்து
ஆள்கொண்ட அருளில் அமிழட்டுமே
அமிழ்ந்து
ஊழ்கொண்ட வாழ்வை மீட்கட்டுமே
மீண்டும்.
தெரிந்தால்
சூல்கொண்ட சூட்சுமம் சுடரட்டுமே
சுடர்ந்தால்
நால்வகை வாய்மொழி நவிலட்டுமே
நவின்றால்
பால்துயில் பரமனைப் பரவட்டுமே
பரவினால்
காலமும் கனவும் கனியட்டுமே
கனிந்து
மால்கொண்ட நெஞ்சம் மிதக்கட்டுமே
மிதந்து
ஆள்கொண்ட அருளில் அமிழட்டுமே
அமிழ்ந்து
ஊழ்கொண்ட வாழ்வை மீட்கட்டுமே
மீண்டும்.
No comments:
Post a Comment