ஏன் ஏமாற்றிக்கொள்ள வேண்டும்?
முப்பொழுதும் என்னையே
நினைப்பதாகச் சொல்லி
அப்பொழுதே மறந்த நீ
உன்னையே ஏன் ஏமாற்றிக் கொள்ளவேண்டும்?
சொப்பனமாய்ச் சொன்னதெல்லாம்
சுத்தப் பொய் என்றறிந்தே
எனக்குச் சொல்லிச் சொல்லி
உன்னையே ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும்?
தப்பாது அன்பென்று தாராளமாய்ப்
பொய்கள் தளராமல் உரைத்துரைத்தே
உன்னையே ஏன் ஏமாற்றிக்கொள்ள வேண்டும்?
இப்பாரில் பாசமும் நேசமும்
எல்லாம் பசப்புகள் என்றறிந்தே
பாமரனாய் உன்னையே
ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும்?
அப்பாவியாய் இருக்கும்
என்னையே துன்புறுத்த
இப்பாரில் நீயே உனை ஏன்
ஏமாற்றிக்கொள்ள வேண்டும்?
எப்பிறவி வாய்க்கினும்
அப்பிறவிதோரும் உள்ளே
காப்பாக நின்றென்றும் நற்கதிக்கே உய்க்கும்
காளிபத கமலங்கள் இதயத்தில் திகழக்
காரிருள் துயரத்தின் பிடியில்
கட்டுண்டு நெஞ்சே!
உன்னை நீயே ஏனோ
ஏமாற்றிக் கொள்ள வேண்டும்?
***
No comments:
Post a Comment