Friday, February 26, 2016

பலிபீடம்

தெய்வங்களின் பேரால்
கேட்கிறோம் பலிகள்
தாமாக முன்வந்து
தலைதரத் துணிந்தவர்கள்
தேவர்களின் தாமம் புகுவர்
மக்களின் பேரால்
கேட்கிறோம் தன்னல மறுப்பு
தாமாகத் தம்மைத்
தமதுடைமை விட்டவர்கள்
தலைசிறந்த அங்கத்தினர்.
வரலாற்றின் பேரால்
விழைகிறோம் நும் மனமாற்றம்
வந்தே தீரும் விதிசக்தி
வரலாறு வலிந்துங்கள்
மனத்தைத் திருகுமுன்னர்
திருந்துவோர் தப்பித்தோர்.
உலகமயமாக்கல் பெயரால்
உங்கள் விலை இவ்வளவு என்று
நிர்ணயமாகிறது 
மொழி ஒன்றே;
மாற்றம் பல;
மனிதர் பலர்,
தேற்றம் ஒன்றே. 

***

No comments:

Post a Comment