Saturday, February 27, 2016

பரிதியின் பரிவு

ஆழ நெடுங்கடல் பழகிய மீன்
அலை எத்தியடித்திடக் கரைமீது
வாழத் துடித்திட்ட காட்சியினை
வேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான் 

மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன்
வெள்ளி துடித்திட்ட மீனொளியில்
மாலை அடைந்தனன் மனமயங்கி
அயர்ந்து விழுந்தனன் மைவரையில் 

காலை தொடங்கித் தான் செய்தசெயல்
கடமைதான் என்றுதான் கொண்டாலும்
ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர்
வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய் 

வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய்
வான்வயல் கான்கடல் வரப்பெங்கும்
படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில்
பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே. 

*** 

No comments:

Post a Comment