உன்னைக் குறிப்பிட்டேன் என்று சொன்னாய்!
முன்னர் நான் எழுதியது
உன்னைப்பற்றித்தான் வந்தது
என்று சொல்லிச் சென்றாய்.
நண்பரே! என்னைப் பற்றிக் கொஞ்சம்
உம்மிடம் சொல்லிவிடுவது
நன்மை என்றே கருதுகிறேன்.
என் உள் கோயில் பிராகாரம்
மூவர் மட்டுமே இருக்கும் இடைகழி.
ஒன்று நான்;
எப்படியெல்லாம் நான்
ஆகவேண்டுமென்று
நியமித்துக் கொண்டிருப்பவன்;
மற்றொன்று நான்;
எப்படியெல்லாம் என்னை
ஏமாற்றிக் கொள்ளலாம்
என்று பார்த்துக் கொண்டிருப்பவன்;
மூன்றாவது கர்ப்ப க்ருஹத்தில் ஒருவர்.
அவரை மட்டும் நான் பார்ப்பதே இல்லை;
பயம்; அந்நியம்; புரியாமை,,
ஏதோ ஒன்று.
பயம்...என் ஆட்டம் முடிந்துவிடுமோ...
அந்நியம்....உச்சக் கட்டமான அந்நியோன்யம்
நடைமுறைக்கு உதவாது என்று..
புரியாமை .... இலட்சிய நிலையில்
திகழும் என்னைப் போன்று
ஏன் சில சமயம் கருவறைக்குள்
இருக்கும் படிவம் காட்சி தருகிறது....
மூவர் பாடே இப்படித் திண்டாட்டம்!
நாலாமவருக்கு இடம் கேட்டால்...
***
No comments:
Post a Comment