Saturday, February 27, 2016

பேதைமை

எதிர்காலத்தில் என்னைத் தேடிக்
கண்டடைய வேண்டிய நான்
பழங்காலத்தில் புதையுண்டு விட்டதாய்ச்
சொல்லிவந்த சுவடிகள் பல்லிளித்தன
பழங்காலத்தில் தேடி இல்லை என்று
அறுதியிட்ட நான்
நிகழ்கணக் குன்றின் மேல் நின்று நோக்குங்கால்
வருங்கால வியன் நிலத்தின் கண்
கலங்கரை விளக்காய் எனக்கு நானே நிற்குங்கால்
புலரியில் பிதிரும் புன்னிருட்டாய்ப்
பேதைமை தோற்றின ஆங்கண். 

*** 

No comments:

Post a Comment