படிச்சவ ராங்கியப் பாரு.
ஐயய்யோ
புத்தியால் வந்த இந்தச்
சமுதாய நிராகரிப்பைச்
சரிசெய்வது எப்படி?
சராசரி ஆவது எப்படி?
புத்திகட்டையாகத்
திமிர்த்தடியாகப் பார்த்து
வாழ்க்கைப் பட்டால்
கழுத்தை நீட்டிவிட்டால்
’படிச்சிருந்தாலும் ....
அடக்கம். பதவிசு...’
பேர்வாங்கிவிடலாம்;
வாழ்வின் பயன்
பெற்றுவிடலாம்.
ஏதோ...அவ்வப்பொழுது..
கிணற்றில் நீர் சேந்தும் பொழுது,
பாத்திரம் தேய்க்கும் பொழுது,
அடுப்பெரி தீயைப் பார்த்து
நீர் கொதிக்கக் காக்கும் பொழுது,
பெருமூச்சு எறிந்தாலும்,
பார்வை வெறித்தாலும்,
கண்களில் ஒற்றி எடுக்கப்
புடவைத் தலைப்பைத் தேடிக்
கை சென்றாலும்.....
***
No comments:
Post a Comment