தீயொன்று கண்டேன்
நீ யொன்றி என்னை -- நீள
நோக்குமுன் விழியில்
நான் எரிகின்ற போது
தேன் ஒன்று கண்டேன்
தேன் ஒன்று கண்டேன் -- நாதத்
தேன் ஒன்று கண்டேன்
அன்பென்ற அருவி -- உன்
அமுத நாவில் பொழிய
வான் ஒன்று அடைந்தேன்
வான் ஒன்று அடைந்தேன் -- இன்ப
வான் ஒன்று அடைந்தேன்
உயிர் வேகத்தில் நீ கூடவே
உயர் போதத்தில் நாம் சேரவே
வான் நின்று அளந்தோம் -- மகிழ்
வானின்று அலர்ந்தோம்
உயிர் மன்றில் கலந்தோம்
உணர்வொன்றிப் புலர்ந்தோம்
பயில்வேதப் பொருளாய் விளைந்தோம்.
தீயொன்று கண்டோம் -- தெய்வத்
தீயொன்றக் கண்டோம்.
***
No comments:
Post a Comment