இருக்கின்றன.
பறக்கிறவரை பறந்துவிட்டுப்
பாருலகு மீண்டுவந்து
பக்கத்து வீட்டிற்கு
அடுத்த என் வீட்டில்
இறங்கி
பதுங்கு குடம்பை என்னுடலுள்
பக்குவமாய்ப் பள்ளிகொண்டு
மீண்டும் சிறகு விரித்துச்
செவ்வானம் கோதிவிட்டுச்
சிந்தைக் கெட்டாத தொலைவுகளைக்
காற்கிடையில்
கொள்ளும்வரை...
இறக்கைகள்
மிகப்பெரிதாய் இருக்கின்றன.
விரியும்போது விரிந்துவிட்டாலும்
மீட்டுச் சுருக்கி
மண்குடலையில்
பாங்காய் அடைத்து அடைத்து
வைப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிடுகிறது.
***
No comments:
Post a Comment