Friday, February 26, 2016

காலில் கண்

இலக்கிய வீதியிலே - எங்கும்
இருட்டாய் இருக்கிறதே
காலில் கண்ணுண்டா -- எங்கும்
கட்டற்றுத் திரிகின்றீர்!

நந்தா வான்கதிர் கூடவரும்
நயந்து செலும் வழி காட்டிவரும்
கதிர்வழி ஞானக் கிழவன் யான்
புளிய மரத்தின் நீழலெலாம் -- பொலியும்
குழந்தையின் தவமே ஆழுமுளம்
கவிதை அரண்மனையில்
கணக்கிலா அறைகள் தாமுண்டு
கதவம் அடைத்தனவாய்க்
கலங்கிடச் செய்வதும் அதிலுண்டு
போதத் திருநாவில்
போந்துவரும் சொல்லில்
பொற்கதவம் திறக்கும்
பொன்னுலகம் பிறக்கும்.
பொற்கதவமெல்லாம்
பொன்மொழிக்கே திறக்கும்
பதம்பெறத் திருவாக்கில்
போதமெழும் வார்த்தை
மொழிந்திடு முன்னர்தாம்
திறந்திடும் கதவமெல்லாம் 

உலகம் ஒரு கோடி
தொட்டே மறுகோடி
காலம் ஆதிமுதல்
காணும் இன்றுவரை
கவிஞர்கள் பலநூறு
கவிதையும் பலவாறு
கலந்தவை தம்மிலெங்கும்
குலவிடும் ஒரு புள்ளாய்க்
கலந்திடும் பேறு பெற்றேன்
கைவந்தது மென்னவெனில்
கற்றநல் வித்தையெலாம்
கவிதையென்றே யுரைப்பேன்.

***

No comments:

Post a Comment