ஐயா! உங்களோடு பேச வேண்டுமே!
செல் போன் இருக்கிறதா?
அப்படியன்று. உங்களைக் காண வேண்டும்.
சாட்டில் வீடியோ இருக்கிறதா?
அப்படியில்லை. நேரே வந்து உங்களைக்
கண்டு பேச... எப்பொழுது உங்களுக்கு..?
ம்.ம்.. என்ன விஷயம்?
இல்லை ஐயா. தங்களைச் சந்தித்து...
உங்களுக்குத் தொந்தரவு இல்லை என்றால்..
வாருங்களேன்...
வந்தார்.
வணக்கம்... நான் தான்...
ஓ அவரா? வாருங்கள்..
உங்கள் எழுத்துகளை நான் படிப்பதில்லை.
ஓ நல்லது.
இல்லை படிக்க வேண்டும் என்று சேமித்து..
வைத்துள்ளேன். ஆனால்
புரியவில்லை....
பரவாயில்லை. புரிகின்ற வேறு ஏதாவது
படியுங்களேன்.
ஆனால் நீங்கள் நேரில் வந்து சந்திக்க
விரும்பிய காரணம்...
இல்லை.. உங்களைச் சந்திக்க
நெடுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்...
ஓ நல்லது.
ஐயா! கொஞ்சம் இந்தப் பக்கம் பார்த்தீர்கள் என்றால்...
நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால்...
இந்தச் சின்னச் சில்லாக்கு மைக்கை
அப்படியே.. சட்டையில்...
இதோ இப்படித்தான்....
ஐயா நீங்கள் இயல்பாக
உங்கள் வீட்டில் நடப்பது போல்..
சும்மா கேஷுவலாக நடந்து...
இப்படி
இப்படி
இப்படி
கேமரா மேன் வந்தார்
மேடை நிபுணர் வந்தார்
ஒலி ஒளி அமைப்பாளர் வந்தார்
பேட்டி அமைப்பாளர் வந்தார்
ஆனால்
யாரோ ஒருவர்
போனில் பேசினாரே
பார்க்க வேண்டும்
சந்திக்க வேண்டும்
என்று சொன்னாரே...
அவர் மட்டும் வரவே இல்லை.
வரமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.
அது ஒரு பேய்த்தேரின் ஓட்டுநர்...
அடுத்த முறை ......
சார்! உங்களை நேரில் வந்து...
சந்திக்க வேண்டுமே...
எப்பொழுது உங்களுக்கு...?
சாரி. ராங் நம்பர்.
டோண்ட் டிஸ்டர்ப்.
***
No comments:
Post a Comment