காலம் நழுவிக் கொண்டிருக்கிறது.
நீர்பூத்த பாசியென நிலவும்
பச்சைச் சிரிப்புகள்
நின்றெதிர்க்கும் கதிர்க்குத் தடையாகி
நீர்மைகெட மூடிக் கவிகிறது.
குன்றொளிரும் கோலம்
கண்டும் காணாமல் நிற்கிறது.
அன்றுரைத்த வார்த்தை
அச்சு அசலாய் ஆயிர விளக்கம் கண்டு
உயிர்க்காவல் பூண்டாலும்
நிச்சலும் நகரும் வாழ்வில்
நிதர்சனம் பேதலிக்கிறது.
நீளாத நிழலில்லை;
நீண்டுவந்து தீண்டாத கதிரில்லை;
கதிர்காட்டக் காணாத காட்சியில்லை;
கண்டபின்னும் கருத்தில் புலராத
விடியல்கள் ககன இருளாகிக்
கருமை பூசும் காலச் சுவர்;
ஒருமைக்கும் பன்மைக்கும்
இடைகழியாய் நிலவும் படைப்பு
ஒருக்களித்துச் சுருண்டு
ஓர்ந்த துயிலாகிக் கண்ட கனவாய்
விரியும் வினையின் நனவுகள்;
தெரியும்வரைதான் தேற்றம்;
தெளிந்த மயமாகிப் போன மனத்தில்
தோற்றமாய் நின்ற தூவெளி
ஊற்றெடுத்த அருளின் உறைபுனல்;
ஆற்ற இனிதுடைத்து அகத்தின் வாழ்வெனச்
சீற்றம் கொண்டு சிணுங்குகிறது
புறத்தின் புழுக்கம்;
சிந்தை கதுவிச் செல்லும் சீர்மை
சிந்தாகுலச் சேற்றில்
பின்னப் பிரதிபலிப்பாய்ப் பிணங்கும்;
அன்னமென ஊர்ந்து அணுகி
அகன்றுவிடும் அமைதி;
மன்னும் பெருவாழ்வுக்கேங்கி
மறையும் மண்ணின்
பொல்லாச் சிறுவாழ்வு;
இருக்கும் பொழுது
இனிய அருளின் முதிர்சுவையாய்
வந்துவிடலாகாதா
என் நினவின் முற்றம்
சுடரும் அகலாகிக் கடிய விரையும்
காரிருளின் மைக்குகையில்
காளியின் கருணை.
நீர்பூத்த பாசியென நிலவும்
பச்சைச் சிரிப்புகள்
நின்றெதிர்க்கும் கதிர்க்குத் தடையாகி
நீர்மைகெட மூடிக் கவிகிறது.
குன்றொளிரும் கோலம்
கண்டும் காணாமல் நிற்கிறது.
அன்றுரைத்த வார்த்தை
அச்சு அசலாய் ஆயிர விளக்கம் கண்டு
உயிர்க்காவல் பூண்டாலும்
நிச்சலும் நகரும் வாழ்வில்
நிதர்சனம் பேதலிக்கிறது.
நீளாத நிழலில்லை;
நீண்டுவந்து தீண்டாத கதிரில்லை;
கதிர்காட்டக் காணாத காட்சியில்லை;
கண்டபின்னும் கருத்தில் புலராத
விடியல்கள் ககன இருளாகிக்
கருமை பூசும் காலச் சுவர்;
ஒருமைக்கும் பன்மைக்கும்
இடைகழியாய் நிலவும் படைப்பு
ஒருக்களித்துச் சுருண்டு
ஓர்ந்த துயிலாகிக் கண்ட கனவாய்
விரியும் வினையின் நனவுகள்;
தெரியும்வரைதான் தேற்றம்;
தெளிந்த மயமாகிப் போன மனத்தில்
தோற்றமாய் நின்ற தூவெளி
ஊற்றெடுத்த அருளின் உறைபுனல்;
ஆற்ற இனிதுடைத்து அகத்தின் வாழ்வெனச்
சீற்றம் கொண்டு சிணுங்குகிறது
புறத்தின் புழுக்கம்;
சிந்தை கதுவிச் செல்லும் சீர்மை
சிந்தாகுலச் சேற்றில்
பின்னப் பிரதிபலிப்பாய்ப் பிணங்கும்;
அன்னமென ஊர்ந்து அணுகி
அகன்றுவிடும் அமைதி;
மன்னும் பெருவாழ்வுக்கேங்கி
மறையும் மண்ணின்
பொல்லாச் சிறுவாழ்வு;
இருக்கும் பொழுது
இனிய அருளின் முதிர்சுவையாய்
வந்துவிடலாகாதா
என் நினவின் முற்றம்
சுடரும் அகலாகிக் கடிய விரையும்
காரிருளின் மைக்குகையில்
காளியின் கருணை.
***
No comments:
Post a Comment