Saturday, February 27, 2016

நான் உள் அறை

அறைக்குள் நான் இருந்தேன்
வெளி இருந்தது.
பொருட்கள் இருந்தன
ஓசை இருந்தது
நகர்வுகள் இருந்தன
ஒளி இருந்தது
காட்சி இருந்தது
நான் இந்த ஆள் என்றுதான் நம்பினேன்
ஆனால்
நான் ...வெளி போன்று
ஆனால் என்னில் இந்த வெளியும் இயலுமாறு
அருவமான ஓர் இருப்பாக
அனைத்தும் என்னுள்
பொருட்கள், தரை
நகர்வுகள், ஓசைகள்
ஒளி, காட்சி
என்று அனைத்தும் என்னுள்
இருக்கும் விதத்தில்
அருவமான ஒரு விரிவாக
அனைத்தும் உள் இயலும்
ஓர் கொள் இடமாக
என்னை உணர நேருங்கால்
என்னில் இயன்று ஒருவர்
ஓர் ஆள்,
அமர்ந்து இந்தக் கவிதையை
எழுதுவதைச்
சாட்சியாக விரியும் நான்
காணும் அந்தக் கண்ணும்
நானாய்......
உலகம் வித்யாசமாக இருக்கிறது! 

***

No comments:

Post a Comment