என்று தெரியாத கணங்களில்
தெய்வத்தை நோகிறோம்,
அந்த நோவின் மூலமாகத்தான்
தெய்வம் நம் திமிரத்தை
அறுத்தெறிகிறது
என்பது புரியாமலேயே.
தேரைக்கு நீரும்
கருவுக்குள் உணவும்
யார் தேடிச் சேர்த்தது?
பாருக்குக் கடலும்
மேலாக்கும் வானும்
வேருக்கு நீரும்
யார் வேலை இங்கு?
யாரேனும் உண்டா? - இல்லை
வார்த்தை விளையாட்டா?
கூறாத கொள்கை அந்தக்
ககன விளையாட்டா?
***
No comments:
Post a Comment