Friday, February 26, 2016

கவிதை

கவிதை என்பது
மொழியைத் தழுவி
நானிடும் முத்தங்கள்.
முத்தங்கள் முற்றத்தில்
முத்துகள் போல் நிறுக்கப்படுங்கால்
நான் என் இதழ்களை
நொந்துகொள்கிறேன்
புறக்கைகளால்
அகத்தின் நாணம்
அசட்டுச் சிரிப்பாய்
முகத்தின் அமைதியாய்
உறைந்து போகிறது. 

***

No comments:

Post a Comment