Friday, February 26, 2016

நிழலின் கருமை

வெறுமையில்தான் போலும்
உலகின் படுகை
உள்நிசியின் ஊதையில்
ஊர்மண்ணின் புழுதி
நியான் வெளிச்சத்தடியில்
நரை தலையின் பெருமூச்சில்
நிழலின் கருமை அசைகிறது.
நடக்கும் பொழுது தடுக்கிவிட்ட கல்
அசையாமல் இருக்கிறது
பழுதடைந்த பஸ் போல. 

***

No comments:

Post a Comment