முள்ளும் உண்டு
மணமும் உண்டு.
முள்ளற்ற மலருக்கும்
முள்ளுக்குப் பதிலாய்ச்
சில தடைகள் உண்டு.
மலர் கொய்யப் போகிறவர்
முள் குத்தித்
தடைதடுக்கிக்
கையுதறிப் பூவை
நையச் செய்திடுவார்;
குத்திய முள் கடுக்கும் விரல்
வாயுறிஞ்சி நின்றிடுவார்.
தேனுண்ணும் வண்டு
திறந்து இதழுறிஞ்சித்
தன் பயன் கொள்ளும்.
அந்தரத்தில் அழுக்கின்றி
அதன்வேலை முடிந்துவிடும்.
மலரைக் கவிந்த வானாய்
அலர்த்தத் துடிக்கும் காற்றாய்ப்
புலரத் தழுவும் கதிராய்
மலராய் ஆகும் மௌனம்
நிலைப்பேறாகும்.
***
No comments:
Post a Comment