Friday, February 26, 2016

தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால்....
வைத்துப்பார்.
விரல் காயும், எரியும்,
கரியும், தீய்க்கும்.
வைத்துக்கொண்டே இருந்தால்
விரல்கள் இன்றி
மொட்டை வேதனையாய்க்
கை மாறும்.
நின்னைத் தீண்டும் இன்பம் நந்தலாலா
என்று ஆட்டிக்கொண்டே நடந்தால்
கவியின்பம் கிட்டுமா?
போ....போ....
போய்...எந்தத் தீ?
எந்த விரல்?....
எந்த இன்பம்?....கேட்டுவா.
இந்த வழியாகப் போகாதே.
வேறுவழியாகப் போய்ப்பார்.
அங்கே
கனல் மணக்கும் பூக்கள்
கொட்டிக் கிடப்பனவாம். 

***

No comments:

Post a Comment